Wednesday, April 26, 2006
இறுக்கம்
அவன் அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பியதன் காரணம், அன்று அவனுடைய திருமண தினம். திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழிந்ததை கொண்டாடவே அவன் போய்கொண்டிருன்தான்.அப்பொழுதுதான் இவை எல்லாம் நடந்தது.
ஆவலுடன் மகாலட்சுமி காத்திருந்தாள். நரேனுக்கு மகா என்றால் கொள்ளை ஆசை. ஆதுவும் மகா 'குட்டி' அஸ்வினுடன் விளையாடுவதை பார்த்துகொண்டே இருக்க வேண்டும் என்பதே அவனுடைய ஆசை அனைத்தும். எல்லா செல்வங்களையும் கொடுத்த ஆண்டவன் குழந்தையை மட்டும் தத்து எடுக்க வைத்து விட்டான்.சென்னையில் அவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி கட்டிடத்தை ஒரு சன்தோ` பூங்காவாக மாற்றியதே மகாதான்.
அன்று அவர்கள் பாரதி இல்லம் செல்லவிருந்தனர். பெயரைப்போல் புரட்சிகரமான இல்லம் அது. அனாதை குழந்தைகளயும் கைவில்ப்பட்ட பெண்களையும் காத்து வருகின்ற இடம். ஆங்கு இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய் உண்டு. இதனால்தானோ என்னவோ அந்த சீமான் 'பாரதி குடும்ப இல்லம்' என்று பெயர் வைத்தார்.
நரேன் கண்விழித்துப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்கு தெரிந்த்தது அவன் மருத்துவமனையின் அறையில் இருந்தது. சுற்றிப்பார்த்தான், யாருமில்லை, ஒரு எ.சி.ஜி கருவி சிறு ஒலி எழுப்பிக்கெண்டிருந்தது. சட்டென்று அவனுக்கு அவள் முகம் நினைவில் வந்தது, தலை சுற்றியது, கருவி துரிதமாக ஒலி எழுப்பியது. ஆவன் மீன்டும் மயக்க நிலை அடைன்தான்.
ரேவதி - கூரிய பார்வை, மெல்லிய இடை, கொடிபோன்ற கால்கள்.வசித்து வந்தது மும்பை.ஆவளுக்கு பிடிக்காத நிறம் சிவப்பு. பிடிக்காத இனம் காட்டுமிராண்டி ஆணினம். எழை குடும்பம், சம்பாதிக்கவேண்டிய கட்டாயம், ஆறியா வயது, சூழ்நிலை எல்லாம் சேர்ந்து அவளை மும்பை செல்ல வைத்தது.
நரேன் மீண்டும் கண்விழித்தான். நேரே பார்க்கலானான். ரேவதி, மகா மற்றும் 'குட்டி' அஸ்வின் கண் முன்னே தோன்றினர். ஆவனுக்கு பதற்றம். கனவா நினைவா என்ற சின்தனை. மகா வாய்திறந்தாள்.
ரேவதி அவங்க கதையை சொன்னாங்க. பையனை தேடி இங்க வந்தாங்களாம். அப்படி தான் அவங்க நம்மள கண்டு பிடிச்சாங்களாம். ரேவதியின் பையன்தானாம் அஸ்வின். ரேவதி பாவம். யாரோ பாவி இவங்களை இப்படி ஆக்கிட்டான். நாமளே பையனை வளப்பதிற்க்கு முழு உரிமை குடுத்துட்டாஙக. சரி அதெல்லாம் விடுங்க. எப்படியோ நீங்க பிழைத்ததே போதும், உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஜ்ந்து மணிக்கு அபி§`கம். நான் போய் பார்த்துடு வரேன். அஸ்வின் கண்ணா வாடா! உமாச்சி கும்ட போலாம்.
நரேனும், ரேவதியும் மறுபடியும் ஒரே அறையில். முன்பு உடல் இருக்கத்தில். இப்போதோ மன இருக்கத்தில். ரேவதி - உங்களை சொல்லி குற்ச்றமில்லை ! எல்லாம் மது மற்றும் வயதின் விளையாட்டு. எப்படியோ என் பிள்ளை எங்க வரனுமோ அங்க தான் வந்து இருக்கான். என்னை விடவும் நல்ல தாய் கிடைச்சிருக்கா. அதுவே எனக்கு போதும். நான் வரேன். உடம்பை பார்த்துகோங்க. அவள் 'பாரதி குடும்ப இல்லம்' நோக்கி பயணிக்க தயாரானாள். எல்லாம் சுபமாக முடிந்தேறியது! ஆனால் நரேனின் இறுக்கம் மட்டும் விலகவில்லை.